உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு தாக்கல்

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

            கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என தீர்ப்பளித்துள்ளது.  இதன்படி, அக்டோபர் 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும்போது,பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தீர்ப்பு குறித்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் பத்ம குமார் கருத்து கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

Related Posts