உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் முறைகேடு என முதல்வர் மீது எழுந்த புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஒதுக்கப்பட்டதில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மனுவில், முதல்வர் மீதான புகாரை நாங்களே விசாரிக்க அனுமதி வேண்டும். சிபிஐ விசாரணை தேவையில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts