உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்:  3 நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் அவர் பிரமாணப் பத்திரம் அனுப்பி இருந்தார்.

தன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை அடைந்ததோடு இதை அவர் முற்றிலும் மறுத்தார்.

தலைமை நீதிபதி மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 3 நீதிபதிகள் குழு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு இது பற்றி விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி ரமணா, தலைமை நீதிபதிக்கு நெருக்கமானவர் என புகாரளித்த பெண் கூறியதால் அவர் பாப்டே குழுவில் இருந்து விலகினார். ரமணாவுக்கு பதிலாக பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts