உச்ச நீதிமன்றம் கேள்வி

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை கட்ட தமிழக அரசிடம் பணம் இல்லை என்பதை நம்ப முடியுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தனியார் நிறுவனத்தால் மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணலுக்கான முழுத் தொகையான 11 கோடியே 27 லட்சம் ரூபாயை உடனடியாக செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அரசிடம் பணம் இல்லை என்றும், 8 வார கால அவகாசம் வேண்டும் என்றும் தமிழக வழக்குரைஞர் தெரிவித்தார். அப்போது இறக்குமதி மணல் வாங்க தமிழக அரசிடம் பணம் இல்லையா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  அதற்கு, தமிழகம் மட்டுமில்லை மற்ற மாநிலங்களிலும் பணமில்லாத நிலையே காணப்படுவதாக தமிழக அரசு வழக்குரைஞர் கூறினார்.  வெளிநாட்டு மணலை வாங்கும் விவகாரத்தில், பணம் செலுத்த தமிழக அரசு 2 மாத கால அவகாசம் கோரியதை ஏற்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், 55 டன் இறக்குமதி மணலுக்கான 11 கோடியே 27 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒரு வாரத்தில் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

 

Related Posts