உடல்நலக்குறைவால் காலமானார் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு

உடல்நலக்குறைவால் சென்னையில் காலமான வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குருவின் இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

அரியலூர் : மே-26

வன்னியர் சங்கத் தலைவரும், பாமக முன்னணி தலைவராகவும் இருந்த காடுவெட்டி குரு உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று காலமானார். அவரது உடல் நேற்றிரவு சென்னையிலிருந்து, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேவுள்ள காடுவெட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவையொட்டி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே காடுவெட்டி குருவின் உருவப்படத்திற்கு பாமகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல், தருமபுரியில் காடுவெட்டி குருவின் உருவப் படத்திற்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Posts