உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடம் : அமைச்சர் விஜயபாஸ்கர் 

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டையில் இன்று காலை மாரத்தான் ஓட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

பழைய பேருந்து அருகில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.

முன்னதாக செய்தியாளர்கிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம், நான்காவது இடத்தில் இருப்பதோடு மருத்துவ துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்.

Related Posts