உடுமலை அணையில் தவறி விழுந்த தாயும் மகனும் பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கனுவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் தனது மனைவி ரேவதி  மகன்கள், சந்தீப், சஞ்சய் சித்தார்த்  ஆகியோருடன் பழனிக்கு சென்று திரும்பும் வழியில், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையை சுற்றிப்பார்க்க சென்றனர்

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் சந்தீப் தண்ணீரில் தவறி விழுந்தான். இதைப்பார்த்து பதற்றமடைந்த ரேவதி மற்றும் ரங்கநாதன் இருவரும் தண்ணீரில் இறங்கி மகனை மீட்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கினர்.

அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மூவரையும் மீட்டனர். இதில் ரேவதி மற்றும் மகன் சந்தீப் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரங்கநாதன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

Related Posts