உணவு டெலிவரி வர்த்தகத்தில் களமிறங்கும் அமேசான் நிறுவனம்

உணவு டெலிவரி வர்த்தகத்தில், இந்தியாவில் தற்போது முன்னணியில் உள்ள பல நிறுவனங்களுக்குப் போட்டியாக அமேசான் நிறுவனம் விரைவில் களமிறங்க உள்ளது.

தங்களுக்குப் பிடித்த உணவகத்தில் இருந்து, விருப்பமான உணவை மொபைல் ஆப்கள் மூலம் வாங்கும் வழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த சேவையில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அடுத்த மாதம் இந்தியாவின் உணவு டெலிவரி வர்த்தகத்தில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்கனவே முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கவும், மக்கள் பல புதிய சலுகைகளைப் பெறவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில், உணவு டெலிவரி வர்த்தகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டே அமேசான் நிறுவனம் கால்பதித்தது. ஆனால், இலக்கை அடைய முடியாததால், அந்த வர்த்தகப் பிரிவு கடந்த ஜூன் மாதத்தில் மூடப்பட்டது குறிப்பிட்த்தக்கது.

Related Posts