உதகையில் அரசு பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

உதகை அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உதகை : ஜூன்-14

நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் இடையே மந்தாடா என்ற இடத்தில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, கனமழை பெய்ததால், பேருந்து நிலைதடுமாறி, 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தனர். படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து இரண்டாக உடைந்ததால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால், உதகை – குன்னூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Posts