உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

உதகையில் சுற்றுலா பயணிகள் வருகையால், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.

ஊட்டி : மே-10

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் இதமான காலச்சூழலை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகை வந்துசெல்வர்.  இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Related Posts