உதித்சூர்யாவுக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாற்றம் செய்து தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இந்த புகார் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் விசாரணை நடத்திய நிலையில், மாணவர் உதித் சூர்யா பெற்றோருடன் தலைமறைவானார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனாலா மும்பை மையத்தில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதால் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இதனிடையே, உதித்சூர்யா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள், சிபிசிஐடி முன் ஆஜராக அறிவுறுத்தினர். உதித்சூர்யா ஆஜரானால் அவரது முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts