உதித் சூர்யா ஆஜராகி விளக்கம் அளிக்க முடியுமா ? உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி முன் ஆஜராகி விளக்கம் அளிக்க முடியுமா என மாணவன் உதித் சூர்யாவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்த நிலையில், நீட் ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் எப்போது ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தலைமறைவாக உள்ள உதித் சூர்யா புகார் தொடர்பாக சிபிசிஐடி முன்பு ஆஜராக விளக்கமளிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவரது பதிலை மதியம் இரண்டு 15 மணிக்குள் அளிக்க வேண்டும் என உதித் சூர்யா வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Posts