உத்தரபிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ளரேபரேலி தொகுதியில் 5வது முறையாக போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் வரும் மே 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக இன்று ரேபரேலி தொகுதியை  சென்றடைந்த சோனியா காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக புறப்பட்டார்.  அவரை வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.   ரேபரேலி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்த போது  ராகுல் காந்தி , பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர். சோனியா காந்தி போட்டியிடுவதை முன்னிட்டு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் அந்த தொகுதியில்  வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts