உத்திரபிரதேசத்தில் வங்கி கணக்குகளில் 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் வருமான வரித்துறையினர் விசாரணை

உத்திரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதில் 1700 ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா 10 ஆயிரம் ரூபாய் என 1 புள்ளி 7 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி ஒரு அரசியல் கட்சி தான் டிபாசிட் செய்திருக்கலாம் என கூறப்பட்டது. புகாரையடுத்து சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயற்சி நடைபெறுகிறதா?  பணம் டிபாசிட்செய்தது எந்த கட்சி வேட்பாளர் என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர். 

Related Posts