உன்னாவ் சிறுமியை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ்மருத்துவமனைக்கு மாற்றம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமி, விபத்துக்குள்ளாகி லக்னோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ்மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் உன்னாவ் சிறுமி சென்ற கார் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் அண்மையில்விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் உறவினர்கள் இருவர் பலியான நிலையில், சிறுமியும் அவரது வழக்கறிஞரும் பலத்த காயமடைந்தனர். லக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப்பல்கலைகழக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியை டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கஉத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி தற்போது உன்னாவ் சிறுமி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். லக்னோவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். இதற்காக கிங் ஜார்ஜ் மருத்துவமனையிலிருந்து லக்னோ விமான நிலையம் வரையிலும், டெல்லி விமான நிலையத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை வரையிலும்சாலையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு எவ்வித தாமதமும் இன்றி சிறுமி பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டார்.

 

Related Posts