உன்னாவ் பாலியல் விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் உட்பட 30 பேர் மீது வழக்கு

உன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் உட்பட 30 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உன்னாவ் பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், தனது உறவினர்கள் இரண்டு பேர் மற்றும் வழக்கறிஞருடன் சென்ற கார் கடந்த திங்கள் கிழமையன்று விபத்துக்குள்ளானது. இதில், அந்த பெண்ணின் உறவினர்கள் இருவருமே உயிரிழந்தனர்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் தான் இந்த விபத்துக்கு காரணம் என புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் உட்பட 30 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Posts