உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுக்கிறது: பேரவையில் மு.க.ஸ்டாலின் புகார்

 

 

 

உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுக்கிறது என்று சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். 

சட்டப்பேரவையில் இன்று காலை பேசிய எதிர்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழக மானிய குழு மூலம் உயர்கல்விக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது என்றும் இந்த நிதியை தடுத்த மத்திய அரசு, தமிழக அரசின் கருத்தை கேட்டதா என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வி நிதி ஒதுக்கீடு ரத்து பற்றி மத்திய அரசிடம் அறிக்கை தரப்படும் என கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து மத்திய அரசுக்கு வரும் 7ம் தேதி அறிக்கை அளிக்கப்படும் எனவும்  அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

முன்னதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன்,மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் காமராஜர் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Posts