உயர்கல்வி நிதி நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

 

நாட்டிலேயே முதல்முறையாக உயர்கல்வி நிதி நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் டெல்லியில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.  பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், உயர்கல்வி நிதி நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு புதிய அமைப்பு மூலம் ஒரு லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள், மருத்துக் கல்லூரிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கவும், கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் யுஜிசி அமைக்கப்பட்டது. இந்நிலையில், யுஜிசி அமைப்பை முழுமையாக ஒழிக்கும் வகையில், உயர்கல்வி நிதி நிறுவனம் என்ற அமைப்புக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

Related Posts