உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னிலை : கே.பி அன்பழகன்

இந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 28-ஆவது பட்டமளிப்பு விழா மதுரை கீழக்குயில் குடியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மொத்தம் 9 ஆயிரத்து ,726 பேருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினார். இதில் கலந்து கொண்டு பேசிய  தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருவதாக கூறினார்.

 

Related Posts