உயர்ந்து கொண்டே இருக்கும் தங்க விலை : சவரன் 27 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை

வரலாற்றில் முதல் முறையாக, சென்னையில் ஆபரணத்தங்கம் சவரன் 27 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. சில நாட்களுக்கு முன்பு சவரன் 26 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று சவரனுக்கு 264 ரூபாய்உயர்ந்து, ஒரு சவரன் 27 ஆயிரத்து 328- ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 416 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் 3 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 848 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் பெண் பிள்ளைகள் வைத்திருப்போர் கலக்கத்தில் உள்ளனர். வெள்ளி ஒரு கிலோ ரூ. 44 ஆயிரத்து 500-க்கும், ஒரு கிராம் ரூ. 44.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அமெரிக்கா புதிதாக 10 சதவீதம் வரிவிதித்து இருக்கிறது. இதேபோல் மத்திய வங்கி கூட்டமைப்பு கூட்டத்தில் வட்டி வீதத்தை 0.25சதவீதம் குறைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயரக் காரணம் என்றும், இனிவரக்கூடிய நாட்களிலும் இதேநிலை நீடிக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Posts