உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுக : மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போலி இரட்டை இருப்பிட சான்றிதழ், வினாத்தாள்களில் தவறான மொழிபெயர்ப்பு, மாணவர்கள் ஆள்மாறாட்டம் என இந்திய இளைஞர்களின் கனவுகளை ‘நீட்’ தேர்வு சிதைத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அனைத்து முறைகேடுகள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த இந்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அனிதாவின் மரணத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடங்கி, சமீபத்திய ஆள்மாறாட்ட முறைகேடு வரை, ‘நீட்’ தேர்வு நம் மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட்’ தேர்வுக்கு உடனடியாக தடை விதிக்க மத்திய அரசுக்கு, அ.தி.மு.க. அரசு அழுத்தம் தர வேண்டும் எனறும் டிவிட்டரில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Related Posts