உயிரிழப்பைத் தடுக்க அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

        டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலில் இருந்து 100 விழுக்காடு உயிரிழப்பைத் தடுக்க அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

                சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த 82 நடமாடும் அரசு மருத்துவக் குழு திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

                இதில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருதாக தெரிவித்துள்ளார்.

100 விழுக்காடு உயிரிழப்பைத் தடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் பொருட்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்

      இதை தொடர்ந்து பேசிய  வருவாய் ஆணையர் சத்யகோபால், கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேடுகளுடன் உள்ள நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Posts