தாய்மை குழந்தை நலன்லைஃப் ஸ்டைல்

உயிரும் உடலும்

குழந்தை பிறந்த பிறகு நம் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதை நாம் எப்படி சரியான விதத்தில் கையாள்கின்றோம் என்பதே மிக பெரிய சவால் ஆகிறது.

உதாரணத்திற்கு என் வாழ்வில் நான் சந்தித்த மாற்றங்கள் அதை நான் எப்படி எடுத்து கொண்டு என்னை மாற்றிக்கொண்டேன் என்று இங்கே பார்க்கலாம்.

வெளிதோற்றம்

மாற்றம் என்றதும் முதலில் இடம் பிடிப்பது அல்லது பிறர் கண்களில் படுவது நம் வெளித்தோற்றமே. அது தான் நம்மை பற்றிய எண்ணத்தை பிறர் மனதில் பதிப்பது.

உடை

குழந்தை பிறப்பிற்கு முன் நன்கு ஐயன் செய்த உடையை(சுடிதார்) உடுத்துவேன். அதுவும் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்று ஐயன் செய்ய நேரம் இல்லை. முடிந்த வரையில் சுருக்கம் இல்லாத உடையை தேர்வு செய்து உடுத்துகிறேன். சில சமயம் டாப்ஸ்ற்கு பொருத்தம் இல்லாத நிறத்தில் லெக்கிங்ஸ் (கருப்பு அல்லது வெள்ளை மேட்ச் செய்து) அணிகின்றேன். இது இன்று பெரும்பாலானோர் செய்வது, அதிலும் காட்டன் உடை என் விருப்பமானது. அது தான் குழந்தையை தூக்கும் போது உறுத்தாமல் இருக்கும்.

சிகை

முன்பு எல்லாம் தலை சீவினால் ஒரு சின்ன சிலுப்பால் இருக்க கூடாது பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்க வேண்டும். ஆனால் இன்றோ தலை சீவினால் போதும் என்றாகிவிட்டது.

 

நகம்

எனக்கு கை விரல்களில் நீளமாக நகம் வளர்த்து நெய்ல் போலிஷ் போட பிடிக்கும். ஆனால் இன்று என் பிள்ளைகளை தூக்கும் போது நகம் பட்டு உறுத்தும் என்று சீராக உறுத்தாத வகையில் நகத்தை வெட்டி வைக்கிறேன் வளர்ப்பது இல்லை. வாட்ச் வளையல் கூட குழந்தைக்கு உறுத்தும் வகையில் அணிவது இல்லை.

ஒப்பனை

முன்பு வேளைக்கு அல்லது வெளியே செல்லும் போது சுமார் அரை மணி நேரம் கண்ணாடி முன்பு செலவிடுவேன். ஆனால் இன்றோ ஐந்து நிமிடம் போதும் ரெடியாகி வெளியே செல்வதற்கு.

காலணிகள்

லைட் வெயிட் மீடியம் ஹீல்ஸ் வைத்த காலணிகளே முன்னர் நான் உபயோகித்தது. பின்பு கர்ப்ப காலத்திலும், கை குழந்தை இருக்கும் போதும் பிளாட் ஸ்லிப்பர்களே சிறந்ததாக உணர்ந்தேன். இப்போது அதுவே தொடர்ந்து உபயோக செய்ய சிறந்ததாகிவிட்டது.

அழகு நிலையம்

கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்கு பின்பும் பியூட்டி பார்லர் செல்வதை தவிர்த்து விட்டேன். கர்ப்ப காலத்தில் ஐ ப்ரோ த்ரெட்டிங் கூட செய்யவில்லை.

ஷாப்பிங்

முன்பெல்லாம் பார்க்க அழகாக உள்ள பொருள்களை ஆசைபட்டு வாங்குவேன். ஆனால் இன்றோ அது உபயோகமானதா என்று பத்து முறை யோசித்து வாங்குகிறேன்.

உணவு

மேல கூறிய எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது உணவு, அதை நான் சரியான ஆரோக்கியம் நிறைந்த உணவை தேர்வு செய்து சாப்பிட ஆரம்பித்ததே என் கர்ப்ப காலத்திலும், அதற்கு பின்பும் தான். அதுவே இன்று குழந்தைக்கும் ஆரோக்கியம் நிறைத்த வீட்டு உணவை கொடுக்கும் பழக்கமகா உள்ளது.

சுய ஒழுக்கம்

முன்பு போல் கோபம் வருவது இப்போது குறைந்துள்ளது. ஆனால் வராமல் இல்லை. அப்படி வரும் பொழுது அமைதியாக இருந்து சூழ்நிலையை சமாளிக்க முயற்சி செய்கிறேன். கோவத்தில் பேசினாலும் முடிந்த வரையில் பேசும் வார்த்தையில் கவனமாக இருக்கின்றேன்.

பார்ப்பதும் படிப்பதும்

நான் இப்பொழுது பார்க்கின்ற வீடியோக்கள், படிக்கின்ற விஷயங்கள் அனைத்தும் பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, குழந்தையின் ஆரோக்கியம், குழந்தைக்கான உணவு சார்ந்ததாக இருக்கின்றது.

இவை அணைத்தும் நாம் சாதாரணமாக கடந்து வந்த விஷயமாக கூட ஒரு சிலருக்கு தோணலாம். ஆனால் இவை அனைத்தும் நாம் வாழ்வில் மிக பெரிய மாற்றம் ஏற்பட செய்கிறது.

நான் மேலே குறிப்பிட்ட அனைத்தும் நான் இழந்ததாக நினைக்கவில்லை. என்னை எனக்கே புதியதாக அறிமுகம் செய்ததாக நினைக்கின்றேன்.

முதல் குழந்தைக்கு பின் நாம் 75% அடைந்த மாற்றம் இரண்டாம் குந்தைக்கு பின்னர் 100% ஆகின்றது. முதல் குழந்தை வளர்ப்பில் நாம் அறியாமல் செய்த சிறு தவறை கூட இரண்டாம் குழந்தை வளர்ப்பில் சரி செய்து விடுகின்றோம். நம் அனுபவம் கற்று தருகின்ற பாடம் இது.

ஆக மொத்தத்தில் நம் உணவு, உடை, பழக்கம் என அனைத்திலும் மாற்றம். ஏன் என்றால் நம் பிள்ளைகள் நம்மை பார்த்து தானே வளர்கிறார்கள். ஆக நாம் நம்முடைய குறைகளை சரி செய்ய வேண்டும் விட்டு கொடுத்து மாற்றங்களை ஏற்று கொள்ள வேண்டும்.

ஆக முதலில் நாம் மாற்றம் கண்டு முதலில் வளர்ச்சி அடைகின்றோம். அதனுடன் நம் பிள்ளைகளை வளர்க்கின்றோம்.

இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியே, இதனால் என் தன்னம்பிக்கை, மனதைரியம், உழைப்பு, நேரத்தை சரியாக கையாளும் விதம் என அனைத்தும் பண்மடங்கு உயர்ந்துள்ளது.

இதை தான் நான் உண்மையான அழகாக நினைக்கின்றேன். இதற்கு முன்பு நான் மேலே குறிப்பிட்டவை எல்லாம் ஒன்றுமே இல்லை.

இது தானே தாய்மைக்கு அழகு…

Tags
Show More

Related News

Back to top button
Close