உயிரை கொடுத்தாவது காஷ்மீரை மீட்போம் : அமித்ஷா ஆவேசம்

உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசினார்.

கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் அமித்ஷா காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் மறுசீரமைப்புக்கு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர்.

அப்போது பேசிய  அமித்ஷா , காஷ்மீர் விவகாரத்தில் முடிவெடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என கூறினார். இதனை தொடர்ந்து மக்களவையில்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அறிவிக்கப்படாத அவசர நிலை தற்போது நிலவுகிறது  என திமுக எம்பி  டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய  அமித்ஷா , பிரிந்துள்ள காஷ்மீரை ஒன்றிணைக்கும் முயற்சி இது என்றார், பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீர் அக்சை சின், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவையே. உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என கூறினார

இதனை தொடர்ந்து மக்களவை உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா கைது செய்துள்ளது பற்றி தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். மேலும் ஃபரூக் அப்துல்லாவின் நிலை குறித்து சபாநாயகர் மக்களவை உறுப்பினர்களுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை? என அவர் கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து தயாநிதி மாறன் கேள்விக்கு சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் ஏதும் சொல்லாமல் அவையைத் தொடர்ந்து நடத்தினார்.

Related Posts