உருவாகிறது அமெரிக்காவில் ஒரு “திருப்பதி”

உலகம் முழுவதும் இந்தியாவின் கலாச்சாரம் வெகுவாகப் பரவி வரும் நிலையில், உலகம் முழுவதும் பல இடங்களில் இந்து மதக் கடவுள்களின் கோவில்கள் கட்டப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கட்டப்பட்டு வருகிற உலகின் மிகப்பெரிய கோவில்களுள் ஒன்றாக இருக்கப்போகும் ஸ்ரீ சுவாமி நாராயணன் திருக்கோவில் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

இந்த திருக்கோவில் ராபின்வில்லில் உள்ள பாப்ஸ் (BAPS) என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த கோவில் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவில், உலகின் மிகப் பெரிய கோவில்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாரம்பரியத்தோடு நியூ ஜெர்சியில் குடிகொள்ளப் போகுகிறார் ஸ்ரீ சுவாமி நாராயணன் என்றே கூறவேண்டும் இக்கோவில் அமெரிக்காவில் அமைந்தாலும் முழுவதுமாக இந்திய கோவில் கடுமான கலையில் கட்டப்படுகின்றது.

மார்பில் கற்களால் உருவான இக் கோவில் முழுவதும் சிற்பக் கலைகளால் சூழ்ந்துள்ளது.162 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ள இக்கோயில் 42 அடி உயரம் மற்றும் 133 அடி அகலம் கொண்டுள்ளது., 13,499 சிற்ப வேலைபாடுகள் கொண்டுள்ள இந்த கோவிலில், 98 தூண்கள், 66 மயில் போன்ற வளையங்கள், 91 யானை சிற்பங்கள், 144 புனித கடவுள்களின் உருவங்களும் மற்றும் பல சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பில் கற்களால் செதுக்கப்பட்ட இந்த சிற்பங்களும் தூண்களும் நியூ ஜெர்சிக்கு செல்வதற்கு முன்பே இந்தியாவில் முழுவதுமாக செதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts