உலககோப்பை ஹாக்கி காலிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி

உலககோப்பை ஹாக்கி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது.

14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற காலிறுதியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து அணி இந்தியாவை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. தோற்றதன் மூலம் இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது.

Related Posts