உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக ஹாரி கேன் நியமனம்

 

 

ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக ஹாரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது. இதில் 32 அணிகள் மோதவுள்ளன. ஒவ்வொரு நாடும் தங்களது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.   இந்நிலையில் இங்கிலாந்து அணி, ஹாரி கேனை கேப்டனாக நியமித்துள்ளது. ஹாரி கேன் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி இந்த சீசனில் 30 கோல் அடித்து அசத்தியுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Related Posts