உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி:ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 28-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது.

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி

49.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி 4 விக்கெட்டுகளும், பும்ரா, சாஹல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Related Posts