உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஜெர்மனி, மெக்சிகோ அணிகள் வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஜெர்மனி, மெக்சிகோ அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ரஷ்யா : ஜூன்-24

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. அரை மணி நேரத்திற்கும் மேலாக இரு அணி வீரர்களும் கடுமையாகப் போராடிய நிலையில், 32வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் ஓலா தாய்வோனென் ஒரு கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். 48வது நிமிடத்தில் மார்க்கோ ரியுஸ் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். கூடுதல் நேரத்தில் டோனி க்ரூஸ் மற்றொரு கோல் அடித்து நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியை வெற்றிபெறச் செய்தார்.

மற்றொரு எப் பிரிவு ஆட்டத்தில் மெக்சிகோ அணியை தென்கொரியா எதிர்கொண்டது. மெக்சிகோ அணி வீரர்கள் 26வது மற்றும் 66வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னணியில் இருந்தனர். ஆட்டம் முடியும் தறுவாயில் தென்கொரியா ஒரு கோல் அடித்தபோதும் 2-1 என்ற கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றது.

Related Posts