உலகின் அதிவேக புல்லட் ரயிலான ‘ஆல்ஃபா எக்ஸ்’ ரயிலின் சோதனை ஓட்டம் ஜப்பானில் தொடங்கப்பட்டது

ஜப்பானில் தற்போது இயக்கப்பட்டு வரும் சிங்கன்சென் புல்லட் ரயிலின் அடிப்படையில் இந்த புதிய புல்லட் ரயில் உருவாக்கப்பட்டு உள்ளது.இந்த புதிய புல்லட் ரயிலுக்கு ஆல்ஃபா எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்த புதிய புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.. சீனாவின் ஃபியூஜிங் புல்லட் ரயிலைவிட 10 கிலோ மீட்டர் கூடுதல் வேகத்தில் செல்லும் திறனை பெற்றுள்ளது. இந்த புதிய புல்லட் ரயில் சோதனை ஓட்டங்கள் முடிந்து வரும் 2030-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, மாக்லெவ் என்ற ரயிலை ஜப்பான் சோதித்துள்ளது.  சக்கரங்கள் இல்லாமல் காந்தவிசை மூலமாக தண்டவாளத்தில் சில மில்லி மீட்டர் இடைவெளியில் செல்லும் திறன் படைத்த மாக்லேவ் ரயில் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts