உலகின் சரி பாதி மனிதர்களை சுற்றி வளைத்துள்ள கொசுக்கள்: அதிர்ச்சி தகவல்

உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் பாதிப்பேர் கொசுக்களால் பரப்பப்படும் வைரஸ் நோய்களுக்கு இலக்காகும் நிலையில் உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.

மழைக் காலங்களில் இனப்பெருக்கம்  செய்வதால், மழையில் கொசுக்களால் பரவும் நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கொசுக்களால் பரவும் பல நோய்களுள் தற்போது மக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது டெங்கு காய்ச்சல் தான்.

டெங்கு காய்ச்சலால், மேற்கு வங்கத்தில் மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் கொசுக்கள் ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயைக் முழுவதுமாக நிறுத்தும் அளவிற்கு அலோபதி மருந்துவம் முன்னேறவில்லை. இந்த நோய் ஏடிஸ் எஜிப்டி வகையைச் சேர்ந்த ‘அனோபிலஸ்’ என்ற பெண் கொசுக்கள் மூலம் பரப்பப்படுகிறது. நோய் தாக்கப்பட்ட உடன் சிகிச்சை பெற்றால் முழுவதுமாக குணமாக்க முடியும் என்றும், நோய் முற்றிவிட்டால் உயிரை காப்பாற்றுவது கடினம் என்கிறது மருத்துவத் துறை.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

4 – 6 நாட்களுக்கு தொடர்ந்த காய்ச்சல் வரும்.

தலை வலி, உடல் வலி, கண் வலிகளுடன் கூடிய தசைப் பிடிப்பும் எலும்பு வலியும் வரும். சில நேரங்களில் மூக்கு, பல் போன்ற இடங்களில் ரத்தப்போக்கு ஏற்படும். மனிதனுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் எண்ணிக்கை குறையும்.

Related Posts