உலகில் எங்கு நடந்தாலும் அது தீவிரவாதம்தான் : மோடி

பயங்கரவாதத்தில் ஏது பாகுபாடு, உலகில் எங்கு நடந்தாலும் தீவிரவாதம்தான் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள பிரதமர் மோடி, “தீவிரவாதம் மற்றும் அதிதீவிர அடிப்படைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை” குறித்த மாநாட்டில் பங்கேற்றார். இதில் பேசிய அவர், இந்தியா, தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்களை வலுப்படுத்தும் முயற்சிகளைக் கட்டமைத்து வருகிறது என்றார். தீவிரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது, ஆயுதங்கள் உதவி வழங்குவது போன்றவற்றைத் தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தீவிரவாதத் தாக்குதல் உலகில் எங்கு நடந்தாலும் அது தீவிரவாதம்தான், தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்பது கிடையாது என்று குறிப்பிட்ட அவர், சிறிய தாக்குதல், பெரிய தாக்குதல் என்றெல்லாம் இல்லை. தீவிரவாதம் தீவிரவாதம்தான் என்றார். தீவிரவாதத்தை உலக அளவில் எதிர்க்க, ஒற்றுமையும், தயார் நிலையும் தேவை என்று வலியுறுத்திய மோடி, இதேபோன்ற நிலையை நாம் பருவநிலை மாறுபாட்டைத் தடுப்பதிலும் காட்ட வேண்டும் என்று கூறினார்.

Related Posts