உலக அமைதியை வலியுறுத்தி தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகளின்  3 நாள் மாநாடு

கோவையில் உலக அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பூடான் நாடுகளின் ஐக்கிய நாடுகளின் தகவல் மையத்தின் ஆதரவுடன் ‘ஒருங்கிணைந்த எண்ணம், தலைவர்களை உருவாக்குதல்’ என்ற நோக்கில் எஸ்.ஐ.எம்.யூ.என். 2019 என்ற தலைப்பில் 3 நாட்கள் நடக்கும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

3வது ஆண்டாக நேற்று முதல் நடைபெறும் இந்த மாநாட்டை திருப்பூர் மாநகரின் காவல் ஆணையர் சஞ்சய்குமார் தொடங்கி வைத்தார். இதில், இலங்கை, வங்கதேசம், மியான்மர், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 12 முதல் 18 வயதுடைய மாணவர்கள் கலந்து கொண்டனர் . இந்த 3 நாள் மாநாட்டில் திறமையான இளைஞர்களின் கருத்துகள், எண்ணங்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்டு சர்வதேச தரம் வாய்ந்தவர்களாகவும், தலைவர்களாக உருவாக்குவதற்கு தகுதிகளை வளர்த்துக் கொள்வது பற்றியும் விவரிக்கப்படுகிறது,

Related Posts