உலக எழுத்தறிவு தினத்தையொட்டி ஓலைச் சுவடி மற்றும் பாறைகளில் எழுதி அசத்திய மாணவ மாணவிகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு ஓலைச் சுவடி மற்றும் பாறைகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் எழுதி அசத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணப்பாறை அருகே அரசு பள்ளியில் நடைபெற்ற எழுத்தறிவு தின நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நாளை கொண்டாடும் வகையில், குத்துவிளக்கேற்றினர்.  பின்னர் ஆரம்ப காலங்களில் நம் முன்னோர்கள் எப்படி எழுத்துக்களை பதிவு செய்தார்கள் என்பதை நினைவு கூர்ந்திடும் வகையில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஓலைச் சுவடி தயார் செய்து, அதில் மாணவ, மாணவிகள் ஒரு குறளை எழுதி, தங்களின் பெயரையும் தேதியையும் பதிவு செய்தனர். மேலும், மாணவ, மாணவிகள் தங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் எழுத்தறிவு பெற முயற்சி மேற்கொள்வோம் என்று உறுதி பூண்டனர்.

Related Posts