உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் பட்டம்: மேரிகோம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதைனைப் படைத்த  மேரிகோமுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம்,உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிலையில், உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மேரி கோமுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் ஆறாவது முறையாக தங்கம் வென்று சாதனை புரிந்ததற்கு பாராட்டுக்கள் எனவும்,. இந்த சாதனை மூலம் இந்திய சிறுமிகளுக்கு அவர்முன்மாதிரியாக திகழ்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார். இதேபோல், பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், அவர் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் எனவும்,. உலக அரங்கில் அவர் ஆற்றியுள்ள சாதனைக்கு பாராட்டுக்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 வது முறையாக பட்டம் வென்ற மேரிகோமின் சாதனையால்  பெருமை அடைவதாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள் எனவும், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்று இந்திய பெண்களுக்கு ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts