உலக கோப்பை கால்பந்து: காலிறுதிச்சுற்றுக்கு இங்கிலாந்து, ஸ்வீடன் அணிகள் தகுதி

 

உலகக் கோப்பை கால்பந்துத் தொடரின் கால்இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு மாஸ்கோவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. முதல்பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்ததால், சமநிலை பெற்றன. பின்னர் பெனால்டி ஷூட் முறையில் 4-க்கு 3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

முன்னதாக, செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற மற்றொரு நாக்அவுட்சுற்றுப் போட்டியில் ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின்  66வது நிமிடத்தில் ஸ்வீடன் அணி, ஒரு கோல் அடித்தது. சுவிட்சர்லாந்து அணி, தொடக்கத்தில் இருந்து கடைசி வரை கடுமையாகப் போராடிய போதிலும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சுவீடன் அணி வெற்றி பெற்று கால்இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது

Related Posts