உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் பின்ஞ் தலைமையிலான அந்த அணியில், டேவிட் வார்னர், உஸ்மான் காவ்ஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், நாதன் கல்டர் நைல், ஜேசன் பெண்டோர்ப், அடம் சம்பா, நாதன் லயன், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடக்கிறது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள்.

 

Related Posts