உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை

பிரேசிலில் நடைபெற்ற ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து இவர் தங்கம் வென்றுள்ளார். கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவான், ஏற்கனவே ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts