உலக சாம்பியன் பட்டத்தை வென்ற மேட் ஹால்

ஜப்பானின் சிபா பகுதியில் நடைபெற்ற விமான சாகச போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேட் ஹால் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இப்போட்டியின் இறுதிச்சுற்று, ஜப்பானின் சிபா பகுதியில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானிகளும் கலந்து கொண்டு, கடல்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த பிரமாண்ட தூண் போன்ற அமைப்புகளுக்கு இடையே லாவகமாகவும், அதே நேரத்தில் அதி விரைவாகவும் விமானங்களைச் செலுத்தி பிரமிக்க வைத்தனர். இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேட் ஹால், ஒரு நிமிடத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விமானத்தின் மூலம் கடந்தார். இதனால் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் உலக சாம்பியன் பட்டத்தை அவர் முதல்முறையாக தனதாக்கிக் கொண்டார்.

Related Posts