உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றார் ஜெப் பீசோஸ்!

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பீசோஸ் கடந்த ஒரு வாரத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்புடைய 10 லட்ச அமேசான் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

கடந்த 6 வருடமாக ஜெப் பீசோஸ் 9 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பங்குகளை விற்பனை செய்து வருகிறார். கடந்த மே மாத கூட ஜெப் பீசோஸ் 940.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றார். இந்நிலையில் இவரிடம் தற்போது 80 மில்லியன் அதாவது 8 கோடி பங்குகளை வைத்துள்ளார்.

அமேசான் நிறுவனம் தனது வர்த்தகத்தை ஒவ்வொரு நாட்டிலும் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகளைத் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாகவே உள்ளது குறிப்பாகச் செப்டம்பர் மாதம் மட்டும் அமேசான் நிறுவன பங்குகள் சுமார் 18 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது.

Related Posts