உலக பயங்கரவாதத்தின் தலைமை அமெரிக்கா ஈரான் அதிபர் ரவுஹானி குற்றச்சாட்டு

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.
 
அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாக தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் எனவும் தங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும்  கூறினார்.
தங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை கருவியாக பயன்படுத்தும் அமெரிக்காதான் உலக பயங்கரவாதத்தின் தலைமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts