உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: பஜ்ரங் பூனியா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் களம் இறங்கிய இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா முதலாவது சுற்றில் ஹங்கேரி வீர்ர் ரோமன் அஷாரினையும், 2-வது சுற்றில் தென்கொரிய வீர்ர் லீ சியங்கையும் கால்இறுதியில் மங்கோலியா வீர்ர் துல்கா துமர் ஒசிரையும் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அரை இறுதி சுற்றில் கியூபா வீர்ர் அலெக்சாண்ட்ரோ என்ரிக் வால்டேசை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.  இதன் மூலம் ஆசிய மற்றும் காமன்வெல்த் சாம்பியனான பஜ்ரங் பூனியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

Related Posts