உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. ஆடவருக்கான 65 கிலோஎடைப்பிரிவில் 3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவும், மங்கோலிய வீரர் துல்கா துமுர் ஓசிரும் மோதினர்.தொடக்கத்தல் 2-7 என்ற கணக்கில் பூனியா பின்தங்கி இருந்த அவர் பின்  மங்கோலிய வீரரை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். பூனியாவுக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இது 3-வது பதக்கமாகும். இதேபோல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, ஈரான் வீரர் ரெஸா அட்ரி நகர்ச்சியை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். தான் பங்கேற்ற முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே ரவிக்குமார் தாஹியா பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts