உலக மல்யுத்த சாம்பியன் போட்டிக்கு சாக்ஷி மாலிக் தகுதி

உலக மல்யுத்த சாம்பியன் போட்டிக்கு சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்ற வீராங்கனை சாக்ஷி, நடப்பு சீசனில் பெரிதளவு சாதிக்கவில்லை. இதனால், உலக மல்யுத்த சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற சாக்ஷி, சுஷில் குமார் இருவரும் தேர்வுச் சுற்று ஆட்டங்களில் பங்கேற்க இந்திய மல்யுத்த சம்மேளனம் வலியுறுத்தியது. இந்நிலையில், நேற்று 62 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி பங்கேற்ற ஆட்டத்தில் எதிராளியான சரிதா மோர் காயம் காரணமாக விலகினார். இதனால் சாஷி அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Related Posts