உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை இந்தியாவும் சீனாவும் அனுபவிக்க முடியாது

இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உலக  வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய  பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா  ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல என்றும் அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

Related Posts