உள்ளாட்சி துறை ஊழல் தொடர்பாக வெளியாகியுள்ள ஆதாரங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுக்கிறாரா

உள்ளாட்சி துறை ஊழல் தொடர்பாக வெளியாகியுள்ள ஆதாரங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுக்கிறாரா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இனப்படுகொலை செய்த முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல் உள்ளதாக கூறினார். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒப்பந்தங்கள் கொடுத்ததை அமைச்சர் வேலுமணி  மறுக்கிறாரா என கேள்வி எழுப்பினார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை பொய் வழக்கில் சிறையில் அடைக்க தமிழக அரசு முயற்சிப்பதாகவும், ஜனநாயகத்தின் குரல்வளையை மத்திய, மாநில அரசுகள் நெரித்து கொண்டிருக்கின்றன எனவும்,  வைகோ குற்றம்சாட்டினார்.

Related Posts