உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும்

குடிநீர் பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காணவில்லை என குற்றம்சாட்டி, திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணா சிலை அருகே முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது பேசியகே.என்.நேரு,, கடந்த திமுக ஆட்சியை தொடர்ந்து மோசமாக விமர்சித்த காங்கிரசை சேர்ந்த செல்லக்குமார்,மயூரா ஜெயகுமார் ஆகியோரின் வெற்றிக்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில். பாடுபட வேண்டியிருந்தநிலையில்  வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு இத்தனை சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் ஒருவர் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார். இதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கக் கூடாதுஎன்றும்  உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து தான் போட்டியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லாக்கு தூக்குவது என்று வினவிய நேரு,  குறைந்தபட்சம், உள்ளாட்சி தேர்தலில் திருச்சியிலாவது திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்றார்.

 

பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த கே.என்.நேரு, உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தையே தாம்  வெளியிட்டதாகவும், அது கலகக் குரலோ காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற குரலோ அல்ல என்றும் தெரிவித்தார்.

Related Posts