உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு 

தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக தனி அதிகாரிகளை நியமனம் செய்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

 இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே தொகுதி, வார்டு மறுசீரமைப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடித்துவிட்ட நிலையில் வாக்காளர் பட்டியலை சரி செய்வத்றகான பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த முடியும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அப்போது வாக்காளர் பட்டியலை சரி செய்வதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், 3 மாத கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் இன்றுவெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட வாரியாகவும் ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கியும், வாக்குச்சாவடியின் எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குச்சாவடியின் வகை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், தந்தை பெயர், வீட்டு எண், வயது, மாநிலம் ஆகியவை எவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும் என பல்வேறு வழிமுறைகளும் அரசிதழில்குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts