உள் தமிழகத்தில் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

 

 

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு  இடங்களில்  இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts