ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கிவைத்தார் முதல்வர்

உதகை கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 122வது மலர்கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

ஊட்டி : மே-18

உதகை கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 122வது மலர்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர்களுடன் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வண்ண வண்ண மலர்களை பார்த்து ரசித்தார். கண்காட்சியில் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பலவண்ண மலர்களால் அலங்கார வளைவுகளும், 50 ஆயிரத்திற்கும் மேலான பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 90 ஆயிரம் சிவப்பு வெள்ளை கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்ட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தின் மாதிரி அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றன. சிறுவர்களை கவரும் வகையில், 1500 ஆர்கிட் மற்றும் 1000 கார்னேஷன் மலர்களால் பார்பிடால் உருவாக்கப்பட்டுள்ளது. மலர்களால் அமைக்கப்பட்டுள்ள செல்பி ஸ்பாட் என்ற இடத்தில் நின்று சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Posts